3 ஆண்டுகளுக்கு முன்பு தப்பி ஓடிய ஆயுள் கைதி பெங்களூருவில் சிக்கினார் தனிப்படை போலீசார் நடவடிக்கை கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருந்து

1 day ago 2

வேலூர், ஏப்.18: வேலூர் மத்திய சிறையில் இருந்து கொலை வழக்கில், 3 ஆண்டுகளுக்கு முன்பு தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி, பெங்களுரூவில் கம்பி கட்டும் வேலையின்போது தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். வேலூர் அடுத்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்கிற முத்துகுமார்(29). இவரை கொலை வழக்கில் பள்ளிகொண்டா போலீசார் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்தனர். 2019ம் ஆண்டு கொலை வழக்கில் முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, முத்துகுமார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகள் நன்னடத்தை கைதியாக இருந்தார். இதையடுத்து கடந்த 2022 பிப்ரவரி மாதம் 21ம் தேதி முத்துக்குமார் உட்பட 20 சிறை கைதிகளை, சிறை காவலர் பயிற்சி பள்ளியை சுத்தம் செய்வதற்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முத்துக்குமார் காவலர்கள் கவனிக்காத நேரத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய முத்துக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். கைதி தப்பியோடிய விவகாரத்தில் பணியில் கவனகுறைவாக இருந்ததாக 3 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எஸ்பி தனிப்படை அதிகாரிகள் அப்போது தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், முத்துக்குமார் சிக்கவில்லை. இந்நிலையில் சிறையில் இருந்து தப்பிய முத்துக்குமார் பெங்களூருவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து 7 பேர் அடங்கிய எஸ்பி தனிப்படை அதிகாரிகள் குழு பெங்களூரு சென்று அங்கு கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த முத்துக்குமாரை மடக்கிப்பிடித்து வேலூர் அழைத்து வந்தனர். அவரை பாகாயம் போலீசார் நேற்று வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 3 ஆண்டுகளுக்கு முன்பு தப்பி ஓடிய ஆயுள் கைதி பெங்களூருவில் சிக்கினார் தனிப்படை போலீசார் நடவடிக்கை கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருந்து appeared first on Dinakaran.

Read Entire Article