மீனவர்கள் மீது அக்கறை கொண்டு கச்சத்தீவை மீட்க அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்தோம்: எடப்பாடி பேட்டி

20 hours ago 3

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று அளித்த பேட்டி:
எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி. அவருக்கு பிறகு அதிமுக அரசிலும் சரி. மீனவர்கள் மீது அக்கறை கொண்டு கச்சத்தீவை மீட்கும் அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்தோம். ஒன்றியத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், எத்தனை முறை கடிதம் எழுதினாலும் அதற்கு எந்த பலனும் இல்லை. இதற்கு ஒரே தீர்வு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் நம்முடைய உரிமையை மீட்டெடுப்பதற்கு ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தை நாடினார்.

நான் முதல்வராக இருக்கும் போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை நேரிலேயே அழைத்து சென்றேன். பிரதமர் இல்லத்தில் பேசினேன். பிரதமர் அரை மணி நேரம் எங்களிடம் பேசினார். எந்தெந்த வகையில் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். யார் எப்போது அனுமதி கொடுத்தார்கள். ஜெயலலிதா வழக்கு தொடர்ந்ததில் இருந்து எல்லாமே எடுத்து சொன்னோம். எங்களுடைய கடமையை சிறப்பாக செய்தோம். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 16 ஆண்டு காலம் ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரம் கிடைத்திருந்தால் நிச்சயமாக மீனவர் பிரச்சனையை தீர்த்து இருப்போம்.

The post மீனவர்கள் மீது அக்கறை கொண்டு கச்சத்தீவை மீட்க அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்தோம்: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article