ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான திருமண உதவி தொகையை ரூ.50,000லிருந்து ரூ.75,000ஆக உயர்த்தியது மாநில அரசு

18 hours ago 2

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பெண்களுக்கான திருமண உதவித் தொகை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜம்மு – காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்களுக்கு நிதியுதவியாக ரூ. 50,000 வழங்கப்பட்டு வந்தது. பெண்களுக்கான திருமண உதவி தொகையை ரூ.50,000லிருந்து ரூ.75,000ஆக அம்மாநில உயர்த்தியது.

அந்தியோதியா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கப்படும். பிஹெச்ஹெச் எனப்படும் சலுகை ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள திருமண வயதுடைய பெண்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்படும். உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் பயனாளருக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். இந்த புதிய அறிவிப்பு ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருவதாக வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான திருமண உதவி தொகையை ரூ.50,000லிருந்து ரூ.75,000ஆக உயர்த்தியது மாநில அரசு appeared first on Dinakaran.

Read Entire Article