மீனவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு

6 hours ago 1

ஊட்டி : மீனவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி மீன் வளத்துறை அலுவலகத்தில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, அவலாஞ்சி பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அவலாஞ்சி அரசு ட்ரவுட் மீன் பண்ணையின் செயல்பாடுகள் மற்றும் அவலாஞ்சி அரசு டரவுட் மீன் பண்ணையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியுதவியின்கீழ் செயல்படுத்தப்படும் டிரவுட் மீன் வளர்ப்பு திட்ட செயல்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். டரவுட் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க தேவைக்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகம் மற்றும் வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றினை புதுப்பிக்க உத்தரவிட்டார்.

மேலும், வில்சன் மீன் பண்ணையை புனரமைத்து மீன் குஞ்சுகள் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திடவும், மசினகுடியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், அங்கு உள்நாட்டு மீன்வகைகள் உற்பத்தி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

பின்னர், மாவட்ட கலெக்டர் ஊட்டி கிளைச்சிறையில் அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் அடிப்படை வசதிகள், உணவுக்கூடங்கள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கௌசல்யா தேவி, ஊட்டி வட்டாட்சியர் சங்கர் கணேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மீனவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article