மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

1 day ago 2

சென்னை,

தங்கம் விலை கடந்த 9-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த 9-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 410-க்கும், ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

11-ந்தேதி, கிராம் ரூ.8 ஆயிரத்து 745-க்கும், பவுன் ரூ.69 ஆயிரத்து 960-க்கும் விற்கப்பட்டது. அதற்கு மறுநாள் அதாவது 12-ந்தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை கடந்து, புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 770-க்கும், ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 15-ந்தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், பவுன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம், ஒரு கிராம் ரூ.95-ம் பவுன் 760-ம் உயர்ந்து, கிராம் ரூ.8 ஆயிரத்து 815-க்கும், பவுன் ரூ.70 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை புதிய உச்சமாக நேற்று 71 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.105-ம், ஒரு பவுன் ரூ.840-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 920-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 360-க்கும் புதிய உச்சத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் இன்றும் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து சவரன் ரூ.71,560க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article