மீண்டும் ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட்; இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் ஆட வாய்ப்பு

2 months ago 13

கேப்டவுன்,

ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் முறையாக 2005-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இந்த போட்டி தொடர் நடைபெற்றது. அடுத்து 2007ம் ஆண்டு இந்தியாவில் ஆப்பிரிக்கா - ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த இரண்டு முறையும் ஆசிய அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 2005 ஆப்பிரிக்கா - ஆசிய கோப்பைக்கான ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தலைமையில் குமார் சங்ககாரா, வீரேந்தர் சேவாக், ஜாகீர் கான் அனில் கும்ப்ளே, சோயப் அக்தர். ஷாஹித் அப்ரிடி ஆகியோர் விளையாடினர்.

அடுத்து 2007-ல் நடந்த ஆப்பிரிக்கா - ஆசிய கோப்பை போட்டிக்கான ஆசிய லெவன் அணி மகிலா ஜெயவர்த்தனே தலைமையில் ஆடியது. அந்தப் தொடரில் வீரேந்தர் சேவாக், சனத் ஜெயசூர்யா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், தோனி ஆகியோர் பங்கேற்றனர். எனவே. மீண்டும் ஆப்பிரிக்கா - ஆசிய கோப்பை நடத்தப்பட்டால் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படும்.

Read Entire Article