மாதவன், ஷாலினி இல்லை... 'அலைபாயுதே'படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

12 hours ago 1

சென்னை,

கடந்த 2000ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளிவந்த படம் 'அலைபாயுதே' இப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மணிரத்னம் 'அலைபாயுதே'படத்தை முதலில் ஷாருக்கான் மற்றும் சுஜோலை வைத்து இயக்க திட்டமிட்டிருந்ததாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் சுஜோலை வைத்து இயக்கதான் முதலில் திட்டமிட்டிருந்தேன் ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லியிருந்தார். ஆனால், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை.

அதனால், அலைபாயுதே படத்தை எடுக்காமல் 'தில் சே' படத்தை இயக்கினேன் தில் சே படத்திற்கு பிறகுதான் அலைபாயுதே கதையில் எது மிஸ் ஆனது என்பதை கண்டுபிடித்தேன்' என்றார்.

பின்னர் அலைபாயுதே படம் இந்தியில் 'சாத்தியா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதனை ஷாட் அலி இயக்க விவேக் ஓபராய், ராணி முகர்ஜி நடித்திருந்தனர்.

Read Entire Article