சென்னை,
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான படம் 'என்னை அறிந்தால்'. இதில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், அருண் விஜய், அனிகா, பார்வதி நாயர், விவேக், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இதில் அருண் விஜய்யின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில், என்னை அறிந்தால் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, நடிகர் அருண் விஜய் மீண்டும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதன்படி, அவர் வெளியிட்டுள்ள பதிவில் , 'மீண்டும் அதே மாயாஜாலத்தை செய்ய நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.