சேலம் வழியாக செல்லும் பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

2 hours ago 2

திருப்பூர்,

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ரெயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு-திருவனந்தபுரம்(வண்டி எண்.06555) வாராந்திர சிறப்பு ரெயில் வெள்ளிக்கிழமைகளில் வருகிற ஜூன் மாதம் 6-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 26-ந்தேதி வரை(17 சேவைகள்) பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் அதிகாலை 4.03 மணிக்கு வந்து 4.05 மணிக்கு புறப்படும்.

திருவனந்தபுரம்-பெங்களூரு(06556) வாராந்திர சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிற ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வரை(17 சேவைகள்) திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 11.53 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.  

Read Entire Article