மிஸ் திருநங்கை அழகிப்போட்டி- மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்

19 hours ago 3

விழுப்புரம்,

இந்தாண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.கூவாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் திருநங்கை 2025 அழகு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி விஷால் தெளிவடைந்தார். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மயங்கி விழுந்த நடிகர் விஷால் காரில் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். முன்னாள் அமைச்சர் பொன்முடி உடனிருந்து, நடிகர் விஷாலை மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலானது. இதனால் அவரின் உடல்நலம் குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் மயக்கமடைந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது.

Read Entire Article