விராட் கோலியின் ஓய்வு பதிவில் '269' என்ற எண்ணை குறிப்பிட்டது ஏன்..?

5 hours ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவதாக முடிவு செய்துள்ளார். அதுவும் எவ்வளவு காலம்? என்பது தெரியவில்லை.

தோனிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியாக சில வருடங்கள் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் வரலாற்று வெற்றிகளை பெற்றது.

இருப்பினும் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய விராட் கோலி தனது 36 வயதில் இன்று ஓய்வை அறிவித்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

விராட் கோலி வெளியிட்ட ஓய்வு குறிப்பின் இறுதியில் '269' விடைபெறுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கான காரணம் என்னவெனில், '269' என்பது கோலியின் தொப்பி எண்ணாகும். இது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமான 269-வது வீரர் என்பதைக் குறிக்கிறது. அவரோடு சேர்ந்து அந்த நம்பரை கொண்ட தொப்பியும் தற்போது விடை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Read Entire Article