
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிதின். இவர் தற்போது 'தம்முடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடன், லயா, சப்தமி கவுடா, 'லப்பர் பந்து' நடிகை ஸ்வாஷிகா, '96' நடிகை வர்ஷா பொல்லம்மா, மற்றும் சவுரப் சச்தேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை வேணு ஸ்ரீராம் இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரங்களை வீடியோ பகிர்ந்து படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, இப்படத்தில், சப்தமி கவுடா - ரத்னாவாகவும், ஸ்வாஷிகா - குட்டியாகவும், சவுரப் சச்தேவா - அகர்வாலாகவும், வர்ஷா பொல்லம்மா - சித்ராவாகவும் நடிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.