சென்னை: தமிழக மின்சார வாரியம், மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக, இன்று (ஏப். 5) காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலங்களிலும் ஒருநாள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் 19 கோட்டங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன்படி, மயிலாப்பூர் கோட்டத்தில், வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலையம், எழும்பூர் கோட்டத்தில், எழும்பூர் துணைமின் நிலையம், அண்ணா சாலை கோட்டத்தில் சிந்தாதிரிபேட்டை, தி.நகர் கோட்டத் தில் மாம்பலம் துணை மின் நிலையம், பெரம்பூர் கோட்டத்தில் செம்பியம் துணைமின் நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது.