சேலம், பிப்.24: சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகரில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவ அலுவலராக கீர்த்தி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையத்தில் இருந்து ₹25 ஆயிரம் மதிப்புள்ள மின்விசிறி மற்றும் மின் சாதன பொருட்களை ஜாகிர் அம்மாபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், அந்த ைமயத்திற்கு சென்று பார்த்த போது, அந்த மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த மின்சாதன பொருட்களையும், ஒயர்களையும் மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து, கீர்த்தி அளித்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் சாதன பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post மின்சாதன பொருட்களை திருடிச் சென்ற கும்பல் appeared first on Dinakaran.