மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு ; தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு

4 weeks ago 4

தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டு பணி நடைபெற்று வருகிறது.

பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த பணிக்கு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மின் மீட்டரை கணக்கெடுக்க ரூ.4-ம், கிராமப்புறம், மலைப்பகுதியாக இருந்தால் ரூ.6-ம் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தங்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று மின் கணக்கெடுப்பு பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது, அவர்களுக்கான ஊதியத்தை மின் வாரியம் உயர்த்தி உள்ளது. அதன்படி, மின் மீட்டர் ஒன்றை கணக்கெடுக்க ரூ.5-ம், அது கிராமம் அல்லது மலைப்பகுதியாக இருந்தால் ரூ.7-ம் என்று உயர்த்தப்பட்டுள்ளது. 

Read Entire Article