
நெல்லை,
கதை நன்றாக இருந்தால், புதிய இயக்குனராக இருந்தாலும் நடிக்கத் தயார் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசிய சூரி "
'இதுவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கதை நல்லா இருக்கும் பட்சத்தில் எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன். பழைய இயக்குனர், புதிய இயக்குனர் என்று எதுவும் இல்லை. இன்றைக்கு புதிய இயக்குனர்கள் பல வெற்றி படங்களை கொடுக்கிறார்கள்" என்றார்.