
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (20.05.2025) செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணியளவில்
(1) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 527 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
(2) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை வெளிவட்ட சாலையில் உள்ள மீஞ்சூர், வெள்ளனுர், வரதராஜபுரம், திருநாகேஸ்வரத்தில் 11.46 கோடி ரூபாய் செலவில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் மற்றும் 3.20 கோடி ரூபாய் செலவில் தியாகராய நகரில் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்து, 255.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
(3) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சுப் பணியில் தேர்வு செய்யப்பட்ட சார்நிலை பணியில் செயல் அலுவலர் (நிலை-4), பணியிடத்திற்கு 29 நபர்களுக்கும், தொகுதி-4 நிலையிலான இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு 44 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு 24 நபர்களுக்கும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடத்திற்கு 12 நபர்களுக்கும், என மொத்தம் 109 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 16 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.