![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/38992823-gv.webp)
சென்னை,
இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் இடிமுழக்கம், 13, கிங்ஸ்டன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இசையமைப்பாளராக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் எஸ்.கே.25 என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில், இவர் இசையமைக்கும் 100-வது படம் எஸ்.கே.25 ஆகும். இந்நிலையில், புதிய படத்திற்கு இசையமைக்க துவங்கி இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மிகவும் ஸ்பெஷலான படத்திற்கு இசையமைக்கும் பணியை இன்று தொடங்கியுள்ளேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். நெருப்பு இப்போது துவங்குகிறது' என்று தெரிவித்திருக்கிறார்.