மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல்

1 week ago 2

தர்மபுரி, ஏப்.9: மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி, மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள். முன்னாள் படை வீரர் மதுவிற்பனை கூடம் அனைத்தும், இன்று (9ம் தேதி) இரவு 10 மணி முதல் 11ம் தேதி காலை 12 மணி வரை, மதுபானங்கள் விற்பனை இன்றி, மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது.
மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article