சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து கட்சியை சிதைக்கும் வகையில் ஒருவர் மறைமுகமாக செயல்பட்டு வருகிறார். தலைமைக் கழக பொறுப்புக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை சகித்துக் கொள்ள அவரால் முடியவில்லை. பழிசுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்பட விரும்பவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
The post மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.