மாவட்ட ரேஷன் கடைகளுக்கான விற்பனையாளர், கட்டுநர் பணிக்கான நேர்முகத்தேர்வு: நவ.25 முதல் நடக்கிறது

2 months ago 10

 

மதுரை, நவ. 18: மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, மதுரை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச்சங்கங்களில் காலியாகவுள்ள 88 விற்பனையாளர் மற்றும் 18 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதன்படி, இவர்களுக்கான நேர்முகத்தேர்வு 25.11.2024 முதல் 6.12.2024 வரை, மதுரை, ஆஸ்டின்பட்டியில் தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர் நேர்முகத்தேர்விற்கான அனுமதிச்சீட்டினை, இன்று (நவ.18.) முதல் மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் (www.drbmadurai.net) வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் பிரத்யேக தொலைபேசி எண் 73387 21122 மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு, தகவல் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post மாவட்ட ரேஷன் கடைகளுக்கான விற்பனையாளர், கட்டுநர் பணிக்கான நேர்முகத்தேர்வு: நவ.25 முதல் நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article