சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் “முதல்வர் படைப்பகம்” அமைப்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம்..!!

2 hours ago 2

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் “முதல்வர் படைப்பகம்” அமைப்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி இன்று (05.02.2025) சென்னை, சி.எம்.டி.ஏ. அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு தலைமையில் 2024-2025ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதிய நிலை குறித்தும், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் “முதல்வர் படைப்பகம்” மற்றும் பல்வேறு நூலகங்களை மேம்படுத்துவது குறித்தும், நிறைவு பெற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., , முதன்மைச் செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் எஸ்.ருத்ரமூர்த்தி, அ.பாலசுப்ரமணியன், ந.ரவிக்குமார், தலைமை நிர்வாக அலுவலர்கள் .மு.இந்துமதி, டாக்டர் பிரின்சிலி ராஜ்குமார், கண்காணிப்பு பொறியாளர் ராஜமகேஷ்குமார், மா.பாலமுருகன், இணை இயக்குநர் (பொது நூலகம்) இளங்கோ சந்திரகுமார், மாவட்ட நூலக அலுவலர் கவிதா, செயற்பொறியாளர்கள் மற்றும் சிஎம்டிஏ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் “முதல்வர் படைப்பகம்” அமைப்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article