மாவட்ட அளவிலான கராத்தே தேர்வு ஓட்டப்பிடாரம் பள்ளி மாணவர்கள் சாதனை

2 hours ago 2

 

ஓட்டப்பிடாரம்,பிப்.24: தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கராத்தே பட்டைத்தர தேர்வானது தூத்துக்குடி மாவட்ட கராத்தே ஸ்கைப் இந்தியா மற்றும் கிங்ஸ் இண்டர்நேஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்தது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இத்தேர்வில் ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் ஆரம்பப்பள்ளியை சேர்ந்த 17 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இத்தேர்வில் அனைவரும் தேர்ச்சிபெற்றனர். இத்தேர்வை தலைமை தேர்வாளரான ஸ்கைப் இந்தியா தேசிய செயலாளர் கராத்தே ஸ்டீபன் நடத்தினார். தேர்ச்சி பெற்றவர்களுக்கு கராத்தே வண்ணப்பட்டயமும், பட்டைத்தர சான்றிதழும் வழங்கப்பட்டது. தேர்ச்சிப்பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஜேம்ஸ் பாஸ்கர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வனஜா மங்கள செல்வி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி தற்காப்பு கலையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

The post மாவட்ட அளவிலான கராத்தே தேர்வு ஓட்டப்பிடாரம் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article