மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

1 month ago 12

திருச்சி, அக்.4: 2024-2025ம் நிதியாண்டிற்கு 4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி வேண்டி விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கை, கால் பாதிக்கப்பட்டோரை, நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் செய்யும் திருமண நிதியுதவி திட்டம், பார்வையற்றோரை, நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் செய்யும் திருமண நிதியுதவி திட்டம், காது கேளாத மற்றும் வாய்பேச முடியாதவரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் புரியும் திட்டங்களின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் திருமணம் புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், தம்பதியாின் எவரேனும் ஒருவா் பட்ட படிப்பு படித்தவராக இருந்தால் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருமண தம்பதியா்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து ஒராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் திருமண அழைப்பிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றின் நகல் மற்றும் தம்பதியா் இருவருக்கும் மணமாகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றுடன் https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும், விபரங்களுக்கு திருச்சி கண்டோண்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ 0431- 2412590 என்ற எண்ணை தொடா்பு கொண்டு விபரங்களை தொிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article