விருதுநகர், ஏப்.9: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விருதுநகர் நகராட்சி 24வது வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார் மனு அளித்தார். மனுவில், விருதுநகர் நகராட்சி பாத்திமா நகர் ரேசன்கடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு சேவை வழங்கப்படுகிறது. கடையின் பி.ஓ.எஸ் இயந்திரத்தில் ஸ்மார்ட் அட்டைகள் ஸ்கேன் செய்து, கார்டுதாரரின் கைரேகை பதிவிற்கு பிறகு பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பி.ஓ.எஸ் இயந்திரம் கடந்த சில மாதத்திற்கு முன் மாற்றப்பட்டு, புதிய இயந்திரம் பொருத்தப்பட்டது. அதில் கார்டுதாரர்களின் கைரேகை பதிவாகவில்லை. கண்விழிகளும் பதிவாதில்லை. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல்ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே பாத்திமா நகர் ரேசன்கடைக்கு பி.ஓ.எஸ் இயந்திரத்தை மாற்றி நல்ல முறையில் இயங்கும் இயந்திரத்தை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
The post மாற்றக்கோரி மனு பாத்திமா நகர் ரேஷன்கடை பிஓஎஸ் இயந்திரம் ‘மக்கர்’ appeared first on Dinakaran.