
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் - மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அதிரடியாக விளையாடிய மார்ஷ் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பண்ட் 7 ரன்களில் நடையை கட்டினார்.
சிறிது நேரத்திலேயே சிறப்பாக ஆடி வந்த மார்க்ரம் 61 ரன்களில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆயூஷ் பதோனி 3 ரன்களில் அவுட்டானார். இறுதி கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் (45 ரன்கள்) அதிரடியாக விளையாடி லக்னோ வலுவான நிலையை எட்ட உதவினார். அவர் இறுதி ஓவரில் ரன் அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது. கடைசி பந்தில் ஆகாஷ் தீப் சிக்சர் அடித்து அணி 200 ரன்களை எட்ட உதவினார். ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக எஷான் மலிங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஐதராபாத் களமிறங்க உள்ளது.