
புதுடெல்லி,
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை திரும்ப பெறக் கோரி ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் விசாரித்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் வாதத்தை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, வக்கீல் சுப்பிரமணியத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு பிறப்பித்த உத்தரவை நீக்குவதாக தெரிவித்ததுடன், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை திரும்பப்பெறுமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்தனர்.