"மார்கன்" படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

1 week ago 2

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் 'மார்கன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 27ம் தேதி வெளியானது.

'மார்கன்' படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். உலகளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 4 நாட்களில் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், " 'மார்கன்' திரைப்படம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் பிரேம் தொடங்கி திரைப்படம் முழுவதும் நம்மை த்ரில்லருக்குள் அழைத்து செல்கிறது. இப்படத்தை திரையரங்கில் பார்க்கத் தவறாதீர்கள். அசத்தலான அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் படத்தை நன்றாக இயக்கி இருக்கிறார். அவர்தான் எனது முதல் படமான 'பீட்சா'வின் தொகுப்பாளர். விஜய் ஆண்டனியின் நடிப்பு அருமை. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

The film #Maargan is a very well written & made intense thriller that keeps us glued right from the first frame through the whole film... Pls don't miss the film in theatres...Awesome Debut by director @leojohnpaultw ( Editor of my first film Pizza ) and nice…

— karthik subbaraj (@karthiksubbaraj) July 1, 2025
Read Entire Article