
சென்னை,
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய அசோக்குமார், இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவில், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.