"மாரீசன்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

7 hours ago 2

சென்னை,

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு 'மாமன்னன்' படம் வெளியாக மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து 'மாரீசன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற 25 ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்த பாடலை மதிச்சியம் பாலா பாடியுள்ளார். பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

Read Entire Article