
விழுப்புரம் மாவட்டம் சாத்தம்பாடியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஜானகி (18 வயது). இவர், சென்னையில் தங்கியிருந்து தியாகராய நகரில் உள்ள கடையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக ஜானகி, மாம்பலம் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதி ஜானகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.