மானூர் அருகே பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து

4 weeks ago 4

மானூர், டிச.18: மானூர் அருகே மாவடி விலக்கை சேர்ந்தவர் பலவேசம் (42). இவர் அங்கு பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி (37). கணவர் பலவேசம் வெளியே செல்லும் போது மகேஸ்வரி கடையை பார்த்துக்கொள்வது வழக்கம். நேற்று காலை பலவேசம் தோட்டத்திற்கு சென்று விட்டார். மகேஸ்வரி மட்டும் கடையில் இருந்தார். அப்ேபாது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post மானூர் அருகே பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து appeared first on Dinakaran.

Read Entire Article