மாநில, தேசிய பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: கனிமொழி

3 months ago 25

சென்னை: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, டெல்லிக்கு புறப்பட்டு சென்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது; நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, தமிழக பிரச்சினை, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்துவோம். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் இந்தியை திணித்துக் கொண்டு இருக்கிறது. பொங்கல் நாளில், சிஏ பவுண்டேஷன் தேர்வு நடக்கவுள்ளது.

Read Entire Article