மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு சீரமைப்பு பணி மும்முரம்

1 week ago 3

 

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு ராம் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரத்திற்கு மேலாக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து கசிந்து வெளியேறிய தண்ணீர் சாக்கடை கால்வாயில் சென்று வீணாகி கொண்டிருந்தது.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் நேற்றைய தினம் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உத்தரவின் பெயரில் ஊழியர்கள் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்த பகுதியில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

The post மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு சீரமைப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Read Entire Article