’பிஎம் ஸ்ரீ’ பள்ளி விவகாரம்: மத்திய அரசு நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்துவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் விவரிப்பு

4 hours ago 2

சென்னை: “தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24-ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது,” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டமானது 2018-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காகத் திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்பளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிர்வு முறையில் விடுவிப்பு செய்யப்படுகிறது.

Read Entire Article