கோவை: கோவையில் உள்ள 6 அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க தனி ஓய்வறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை அரசு கலைக்கல்லூரி, கோவை புலியகுளம் அரசு கலைக்கல்லூரி, ெதாண்டாமுத்தூர், வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட 6 அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைக்க உத்தரவிடப்பட்டு நிதிக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தின்போது ஏற்படும் உடல் ரீதியான பிரச்னையால் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வகையில் தனி ஓய்வறை செயல்பட உள்ளது. இந்த அறையில் மாணவிகள் ஓய்வு எடுக்கும் வகையில் 4 சாய்வு நாற்காலி, திரைச்சீலை மற்றும் கண்ணாடி, உணவு சாப்பிடும் மேஜைகள், முதலுதவி பெட்டி, அடிப்படை மருந்துகள், மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவிகளுக்கான ஓய்வறைகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என உயர்கல்வி இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
The post மாதவிடாய் சிக்கல்களை தவிர்க்க அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை: அடிப்படை மருந்துகள் வைக்க உத்தரவு appeared first on Dinakaran.