சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 5-வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் கோயம்பேடு 100 அடி சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் ஜாக்சன் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடமும் ஒன்றாகும்.