டெல்லி : டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளார். அமலாக்கத்துறை விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி அளித்துள்ளதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள கெஜ்ரிவால், சிசோடியாவிடம் விரைவில் அமலாக்கத்துறை விசாரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி appeared first on Dinakaran.