மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மதுரை ஆட்சியரிடம் விவசாயி கண்ணீர் மல்க புகார்

1 month ago 4

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, அருகேயுள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டத்திற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இதனை தடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 21) மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா தலைமையில் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி வரவேற்றார்.

Read Entire Article