ஊட்டி: நேற்று நடந்த நாய்கள் கண்காட்சியில் சிவாவா, லேப், ேகால்டன் ரெட்ரீவர், கேரவன் அவுண்ட் நாய்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.ஆண்டு தோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி மற்றும் வாசனை திரவிய கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இதுதவிர, படகு போட்டி, படகு அலங்கார போட்டி ஆகியவை நடத்தப்படுகிறது. இவற்றை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.
அதே சமயம் சில தனியார் அமைப்புகள் சார்பிலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சவுத் இந்தியன் கேனல் கிளப் மூலம் நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.இக்கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. இதில், 55 வகையான 450 நாய்கள் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் கீழ்படிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
நேற்று பல்வேறு நாய்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி நடந்தது. இதில், கிரேட் டேன், கோல்டன் ரெட்ரீவர், ரோடியன் ரிங் பேக், பிரஞ்ச் புல் டாக், காசகன் பேனியர், கேரவன் அவுண்ட், டேசண்ட், பீகில், லேப், ஜெர்மன் செப்பர்டு, பிளாக் செப்பர்டு, சிவா வா, டால்மேசியன், கிரேட் டான், சிப்பி பாறை, கன்னி, ராஜா பாளையம் உட்பட பல்வேறு நாய்கள் அணி வகுத்தன. இதில், கோல்டன் ரெட்ரீவ் வகை நாய்கள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்தன.உலகில் உள்ள பல்வேறு வகையான நாய்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான நாய்களை கண்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பார்த்து ரசித்தது மட்டுமின்றி அந்த நாய்களின் அருகில் நின்று போட்டோக்களை எடுத்துச் சென்றனர்.
The post நாய்கள் கண்காட்சியில் சிவாவா, லேப்,கோல்டன் ரெட்ரீவர் நாய்கள் : சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன appeared first on Dinakaran.