சோழவந்தான் பகுதியில் சிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா

18 hours ago 3

சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று சனிப்பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது.சோழவந்தானில் உள்ள பிரளயநாதர் (சிவன்) கோயிலில், நேற்று சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது. இதன்படி பிரளயநாதர் சுவாமி, பிரளய நாயகி அம்மன், சனீஸ்வர லிங்கம், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வந்து அருள்பாலித்தனர். அர்ச்சகர் ரவி சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் மற்றும் சட்டநாத சித்தர் கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோயில், மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post சோழவந்தான் பகுதியில் சிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Read Entire Article