
சென்னை,
கோகுல் கவுதம், ஷருமிஷா, சூர்ய நாராயணன் மற்றும் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மாடன் கொடை விழா'. இதை ஆர்.தங்கபாண்டி இயக்கி இருக்கிறார்.
சிவப்பிரகாசம் தயாரிக்க விபின் ஆர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'மாடன் கொடை விழா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.