ஓ.டி.டியில் வெளியாகும் 5 ஆஸ்கர் விருதுகளை வென்ற 'அனோரா' திரைப்படம்

4 hours ago 1

லாஸ் ஏஞ்சல்ஸ்,

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது.

அந்த வகையில், 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவை நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் தொகுத்து வழங்கினார். இதில், 'அனோரா' திரைப்படம் 5 விருதுகளை அள்ளிக் குவித்தது. அதன்படி, சிறந்த திரைப்படம் , இயக்குநர், நடிகை, படத்தொகுப்பு, திரைக்கதை என 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

இந்த நிலையில் 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த அனோரா திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 17ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

Read Entire Article