மாஞ்சோலை தோட்டப்பகுதியில் வலம்வரும் யானைகள்: வீடியோ வைரல்; பொதுமக்கள் அச்சம்

4 hours ago 2

அம்பை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலையில் காப்பி டிவிஷன் என்ற பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே நின்ற யானைகள், பின்னர் அடர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. தற்போது யானைகள் கூட்டமாக நடமாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் கடந்த ஒரு வார காலமாகவே மாஞ்சோலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் கூட்டம் தொடர்ந்து நடமாடி வருவதாகவும், இடையிடையே இரவு நேரத்தில் யானைகள் பிளிறல் சப்தம் கேட்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் வாழ்வாதாரமின்றி வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

The post மாஞ்சோலை தோட்டப்பகுதியில் வலம்வரும் யானைகள்: வீடியோ வைரல்; பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article