திருச்செந்தூர் பகுதியில் அதிகமாக விற்பனையாகும் கதலி பழம்

2 hours ago 3

திருச்செந்தூர்: முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சுவை மிகுந்ததாகும். வாழைப்பழத்தை பெரும்பாலும் செரிமானத்திற்கும், ஊட்டச்சத்திற்கும் மட்டுமில்லாது ஒரு சில வேளைகளிலும், விரத நாட்களிலும் உணவாகவும் பயன்படுகிறது. கோயில்களில் நித்திய வழிபாட்டுக்காகவும், சுப காரியங்களில் தேங்காய், பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கோயில் நகரங்களில் வாழைப்பழங்களின் விற்பனை அதிகளவில் காணப்படுகிறது.

திருச்செந்தூர் பிரசித்திப்பெற்ற முருகனின் படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக உள்ளதால் இங்கு நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய் பழம் வாங்கி சுவாமியை வழிபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் திருச்செந்தூர் கோயில் வாசல் மற்றும் சன்னதித்தெரு ஆகிய இடங்களில் கடைகளில் பழங்கள் சீப்பு சீப்பாக வெட்டி விற்பனைக்கு தொங்க விடப்படுகிறது. அதிலும் நாட்டுப் பழங்களையே பக்தர்கள் அதிகளவில் சுவாமிக்கு படைக்கின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூர் தாலுகாவிற்குட்பட்ட ஆத்தூர், ஏரல் போன்ற ஊர்களில் விவசாய விளை நிலங்களில் கதலி, கற்பூரவல்லி போன்ற பழங்கள் அதிகளவில் விளைச்சல் செய்யப்படுகிறது.

இந்த பழங்கள் விற்பனைக்காக திருச்செந்தூர் கொண்டு வரப்படுகிறது. அதில் ஒரு கதலி பழம் ரூ.1 க்கு என்ற மலிவு விலையில் அதிக இனிப்பு சுவையுடன் கிடைப்பதால் சீப்பு, சீப்பாக பக்தர்கள் கதலி பழங்களை மொத்தமாக வாங்கிச்செல்கின்றனர். சோனகன்விளையைச் சேர்ந்த நரசிம்மன் என்ற விவசாயி கதலி பழங்களை நேரடியாக கொள்முதல் செய்து தனது இரு சக்கர வாகனத்தில் சுமார் 40 வாழைக்குலைகளை அடுக்கி வந்து கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்து வருகிறார்.

The post திருச்செந்தூர் பகுதியில் அதிகமாக விற்பனையாகும் கதலி பழம் appeared first on Dinakaran.

Read Entire Article