மாஜி அமைச்சர் மீதான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரி வழக்கு: காவல்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு

4 months ago 13

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, புகார்தாரரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், வேலைக்காக பணம் கொடுத்தவர்களை அழைத்து, 70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு மூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களுடன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்தேன். அதில் மேல் விசாரணை நடத்த கோரியிருந்தேன். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மாவட்ட குற்றப்பிரிவிடம் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால், அதனை பரிசீலித்து, மேல் விசாரணை நடத்தி, விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஜனவரி 21ம் தேதிக்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கில் முன்னாள் அமைச்சரையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

The post மாஜி அமைச்சர் மீதான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரி வழக்கு: காவல்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article