சென்னை: கல்வியில் தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்து, கல்லூரி கனவு-2025 எனும் வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டார்.