மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

2 weeks ago 4

ஊட்டி : ஊட்டியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு குறித்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இன்று 25ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நடைபெறுவதை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார். பேரணியானது, கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து துவங்கி, சேரிங்கிராஸ் பகுதி வரை நடைபெற்றது. இதில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ. சிஎம்எம்.

மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித இருதய ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு குறித்தான நெகிழியை ஒழிப்போம் புவியை காப்போம் – குறைந்த பிளாஸ்டிக் அதிக வாழ்க்கை நெகிழியை ஒழித்து நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றுவோம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக இயற்கை பாதுகாப்பு உறுதிமொழியானது ஏற்று கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மைதிலி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை ஒருங்கிணைப்பாளர் சுவாதி, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article