மா மரத்தில் கிடந்த 12 அடி நீள பாம்பு மீட்பு

3 months ago 16

வடகனரா: வடகனரா மாவட்டம் கார்வார் குமட்டா தாலுகாவின் பார்கியில், நேற்று அதிகாலை இந்திரா படகரா என்பவரின் வீட்டு அருகே உள்ள மாமரத்தில் 12 அடி நீள பாம்பு இருந்தது. மாமரத்தில் அமர்ந்து சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது. மரத்தில் பாம்பு இருந்ததை கண்டு பயந்துபோன வீட்டுக்காரர்கள் பாம்பு பிடிவீரர் அசோக நாயக்காவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த அசோகா, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முயற்சி செய்து கலிங்க பாம்பை கீழே இறக்கி மீட்டார். பின்னர் பாம்பை அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. இதனால் குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்தனர்.

The post மா மரத்தில் கிடந்த 12 அடி நீள பாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article