மல்லசமுத்திரம், பிப்.14: மல்லசமுத்திரம் அருகே வட்டூர் ஊராட்சி, மோர்பாளையத்தில் நேற்று காலை வழக்கம்போல் மாட்டு சந்தை கூடியது. மாடுகள் விற்பனை களை கட்டியது. மாலையில் சந்தை ஓய்ந்ததும் ஓரிடத்திலிருந்து குபுகுபுவென புகை வந்தது. திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, காற்று வேகமாக வீசியதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரசேகரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த கூரை கொட்டாய் முழுவதும் எரிந்து நாசமானது. அதேவேளையில், அருகிலுள்ள வள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. சந்தைக்கு வந்தவர்கள் பீடி-சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் வீசியதால் தீப்பற்றியது தெரிய வந்தது.
The post மல்லசமுத்திரம் அருகே சந்தை வளாகத்தில் திடீர் தீ appeared first on Dinakaran.